அரைத்து வைத்த குழம்பு

Loading...

தேவையான பொருட்கள்

காய்  –  கத்திரிக்காய், முருங்கைக்காய், மேரக்காய், பாகற்காய் ( ஏதேனும் ஒன்று )

புளி  –  நெல்லிக்காய் அளவு

அரைக்க

  • சின்ன வெங்காயம்  –  200 கிராம்
  • தக்காளி  –  1
  • வரமிளகாய்  –  4
  • சீரகம்  –  1 1 / 2 தேக்கரண்டி
  • கடலைபருப்பு   –  2 தேக்கரண்டி
  • வெந்தயம்  –  1 / 2 தேக்கரண்டி
  • மல்லித்தூள்  –  3 தேக்கரண்டி
  • துருவிய தேங்காய்  – 2  மேசைக்கரண்டி

தாளிக்க

  • கடுகு  – 1 / 2 தேக்கரண்டி
  • வெங்காயம்  – 1 மேசைக்கரண்டி
  • கருவேப்பிலை   –  சிறிதளவு
  • எண்ணெய்  – 2  மேசைக்கரண்டி

araithu-vaitha-kulambu

செய்முறை

  1. கடாயில் எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
  2. புளியை அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும் , நறுக்கி வைத்துள்ள ஏதாவது ஒரு காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, புளிகரைசலை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. காய் முக்கால் பாகம் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி 10 நிமிடம் கொதித்த பின்பு இறக்கவும்.
குறிப்பு
 
இந்த குழம்பு சாதம், தோசை, இட்லிக்கு நன்றாக இருக்கும்
Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors