இறால் வடை|eral vadai cooking tips in tamil

இறால் – 10
உடைத்த கடலை – ஓரு ஆழாக்கு
பச்சை மிளகாய் – 5
வெங்காயம் – 200 கிராம்
சோம்பு – 1 தேக்கரண்டி (5 கிராம்)
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை -1 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் – 400 கிராம்
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் இறாலை உரித்து சுத்தம் செய்து அதில் பாதி அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து 1 கோப்பை தண்ணீரில் வேக வைக்கவும். பின்னர் வேக வைத்த இறாலை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மேலும் உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை நசுக்கிக் கொள்ள வேண்டும்.

eral vadai,prawn vadai in tamil recipe, eral vadai samayal kurippu,cooking tips in tamil eral vadai

அடுப்பில் வாணலியை வைத்து, 400 கிராம் எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா ஆகியவற்றை அதில் போட்டு சிவக்கும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் சிவந்து மணம் வந்தவுடன், அரைத்து வைத்துள்ள இறாலையும் உடைத்த கடலையையும் அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க வைத்து எடுத்து விட வேண்டும்.
இறால் வடை தயார்.

Loading...
Categories: Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, அசைவம், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors