உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்|weight loss foods in tamil

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்.

ஆம், எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும் சோர்வடைவிடும். இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். எனவே அளவான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமாக சாப்பிட்டால், உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம். அதிலும் இதுவரை எத்தனையோ உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களைப் பார்த்திருப்போம்.

ஆனால், இப்போது பார்க்கப்போவது பலரும் நினைத்துப் பார்க்காத உடல் எடையைக் குறைக்கும் சில உணவுப் பொருட்களைத் தான். இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடுவதோடு, அத்துடன் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுகள் மட்டும் உதவாது. ஆகவே உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள். சரி, அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், கீழே படித்துப் பாருங்கள்…
1 காளான்
உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

2 முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர், முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலின் சக்தி அதிகரிப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமலும் தடுத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

3 ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அதே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.

Your ads will be inserted here by

Easy Plugin for AdSense.

Please go to the plugin admin page to
Paste your ad code OR
Suppress this ad slot.

4 பாகற்காய்
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கும் மிகவும் நல்லது. எப்படியெனில், பாகற்காயை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களானது, உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதை கரைப்பதோடு, கலோரிகளையும் எரித்துவிடும்.

5 காலிஃப்ளவர்
உடல் எடையை குறைக்கப் பயன்படும் உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. அதிலும் அந்த காலிஃப்ளவரை வேக வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் குறைவான கலோரியும், அதிகமான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.

6 பட்டை
பட்டையை உணவில் சேர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே இநத் மசாலாப் பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

7 மிளகாய்
அனைவருக்குமே காரம் என்றால் மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட ஒரு வகையில் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அந்த மிளகாயில் உள்ள பொருளானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

8 முள்ளங்கி
முள்ளங்கியை வேக வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள நார்ச்சத்துக்களானது அப்படியே கிடைத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது கரைக்கப்படுவதோடு, நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும்.

wegit loss foods tamil

9 டார்க் சாக்லெட்
அனைவரும் சாக்லெட்டில் கலோரிகள் அதிகம் உள்ளது என்று சாப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் டார்க் சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

10. பச்சை பயறு
அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள் தான் பச்சை பயறு. உடல் எடையை குறைக்க நினைப்போர், உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

Categories: Weight Loss Tips in Tamil, தொப்பை குறைய

Leave a Reply


Sponsors