கருவேப்பிலைக் குழம்பு|Iyengar samyal

Loading...

தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை – 1/2 கப்

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்

தணியா – 5 ஸ்பூன்

மிளகாய்- 8

மிளகு – 1 ஸ்பூன்

சுக்கு – சிறு துண்டு

வெந்தயம் – 1 ஸ்பூன்

கொப்பரை – 3 ஸ்பூன் விரும்பினால்

புளி – எலுமிச்சை அளவு

உப்பு – தேவைக்கேற்ப

பெருங்காயம்-சிறிது

மஞ்சள் தூள்

தாளிக்க

நல்லெண்ணை ,கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை

Curry Leaves kulambu

தயார் செய்யும் முறை:
புளியை ஊற விடவும்.வாணலியில் துவரம் பருப்பு,கடலைப் பருப்பு,தணியா,மிளகாய்,மிளகு,சுக்கு,வெந்தயம்,பெருங்காயம்,கொப்பரை,கருவேப்பிலை வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணை ஊற்றி,கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து,புளியை கரைத்து

ஊற்றி,மஞ்சள் தூள் சேர்க்கவும்.கொதித்தவுடன் அரைத்த மசாலாவை போட்டு,உப்பு சேர்க்கவும்.

எண்ணை கசிந்து மேலே வந்ததும் இறக்கவும்.கருவேப்பிலை தூவி பறிமாறவும்.கருவேப்பிலைக் குழம்பு செறிமானத்தை தூண்டும்.பித்தம் சரி செய்யும்.

எத்தனை நபர்களுக்கு:
1-5 நபர்கள் வரை
தயாரிக்க ஆகும் கால அளவு:
15 முதல் 30 நிமிடங்கள்

Loading...
Loading...
Categories: Iyengar Samayal, Saiva samyal, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Recent Recipes

Sponsors