கர்ப்ப காலத்தில் பாட்டி வைத்தியம்!|patti vaithiyam pregnant maruthuva kurippu

கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இப்படிபட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து, சட்டியில் வறுத்து-வெடிக்கும்போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால், கால் வீக்கம் குறையும்.

* மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தய கஞ்சி சாப்பிடுவது, சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

 

கர்ப்ப காலத்தில் பாட்டி வைத்தியம்!

* 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீரில், சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிட தரலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரையிலும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்த முருங்கை கீரை சூப் வைத்து சாப்பிடலாம். இதனால் பிரசவம் சுலபமாகும்.

* பிரசவநாள் நெருங்கும் நேரத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறுவலி வரும். அப்போது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்று அர்த்தம்.

Categories: Pattivaithiyam

Leave a Reply


Sponsors