கொழுப்பை குறைக்க சிறந்த 8 வீட்டு வைத்திய முறைகள்|thoppai kuraiya Tips

. கொஞ்சம் கொஞ்சமாக‌ இடைவெளி விட்டு சாப்பிடவும்:
உடம்பிற்கு தேவையான அளவை விட அதிகமாக‌ உட்கொள்வதால்தான், அதிக‌ எடையும், அதிக‌ கொழுப்பு சேர்கிறது. அதிலும் உணவு சுவையாக இருத்தால் அவ்வளோதான், ஒரு பிடி பிடித்து விடுவார்கள். உங்கள் எடையை குறைக்க வேண்டும் என்றால், பின்வரும் வழிமுறையை கடை பிடிப்பது நல்லது. எனவே ஒரேடியாக சாப்பிடாமல், சிறிது, சிறிதாக கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு சாப்பிடுவது எடை குறைய வழி வகுக்கும். இதை கடைபிடிததால், நம் உடம்பில் ஏற்படும் மெட்டாபாலிசத்தால், கொழுப்பும் குறையும்.
2. அதிக தண்ணீர் அருந்தவும்:
அதிக தண்ணீர் அருந்துவதால் உடலில் உள்ள அனைத்து நச்சுகக்க‌ள் வெளியேறுவதோடு, கொழுப்பையும் எரிக்கிறது. நீர், நம் செல்களில் ஹைட்ரேட் ஆவதோடு, உயர் வளர்சிதை மாற்றத்தையும் தருகிறது, மற்றும் கலோரி அதிகமாக உட்கொள்ளும் அளவை குறைக்கிறது. எனவே ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். இதுவே சூடான த‌ண்ணீரக அருந்தினால், கொழுப்பும் கரைவதோடு, தேவையற்ற நச்சுக்களுயும் உடலில் இருந்து வெளியேறும். .
3. பச்சை தேயிலை/க்ரீன் டீ:
பச்சை தேயிலை, முழுமையாக‌ கொழுப்பை எரிக்க‌ உதவும் ஒன்றாக‌ அறியப்படுகிறது. தினமும் 2 முதல் 3 கப் அருந்துவ்தால், உடலில் இருந்து அதிக கொழுப்பு வெளியேற உதவுகிறது. மேலும் நீங்கள் இயல்பாகவே எடை இழக்கவும் உதவுகிறது.

Fat-Burn tips tamil

4, எலுமிச்சை மற்றும் தேன்:
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்தால், தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவதோடு, சிறந்த குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.
5. ஆப்பிள் சாறு வினிகர்:
ஆப்பிள் சாறு வினிகர், செரிமானம் மற்றும் கொழுப்பு எரிவதற்கு நன்றாக பயன்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த வினிகரை இரண்டு தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டால், பசியின்மை மற்றும் எய்ட்ஸால் ஏற்படும் எடை இழப்பை ஒடுக்குகிறது.
6. கருப்பு மிளகு:
கருப்பு மிளகில் காண‌ப்படும் அல்கலாய்டு என்ற ஒரு இரசாயன கலவை, கொழுப்பின் முழு செல்களை உடைக்கிறது. இது ஒரு மூலக்கூறு அளவில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. கருப்பு மிளகு புதிய கொழுப்பு செல்கள் உருவாவதை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது இரத்தத்தில், கொழுப்பினால் ஏற்படும் அடைப்பை கூட கட்டுப்படுத்துகிறது. உங்கள் உணவில் கருப்பு மிளகை சேர்த்துப் பாருங்ளேன், நீங்கள் மெலிவதை நீங்களே உணரலாம். வீட்டில் கிடைக்கும் பொருட்களில், இந்த கருப்பு மிளகு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
7. சீரகம்:
சீரகம் ஒரு கொழுப்பை எரிக்கும் பொருளாக உள்ளது. சீரகம் எடை குறையவும், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து மற்றும் வாய்வு ப்டிப்பை நிறுத்துகிறது. தண்ணீரில் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தவும். சீரகத்தை அனைத்து உணவுகளுக்கும் சேர்க்கலாம்.
8. கொத்தமல்லி சாறு:
கொத்தமல்லி சாறு கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது. இது நீங்கள் எடை இழப்பதற்கும், அதே நேரத்தில் ஆரோக்கியமாக இருக்கவும் உதவி புரிகிறது, மேலும் கொழுப்பை குறைத்து உடலில் உள்ல நச்சு வெளியேற‌ உதவுகிறது.

Categories: Weight Loss Tips in Tamil, தொப்பை குறைய

Leave a Reply


Recent Recipes

Sponsors