சத்தான சுவையான ப்ரோக்கோலி பொரியல்|broccoli poriyal

தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி – 1
வெங்காயம் – 1
பூண்டு – 4 பற்கள்
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 1
கறிமசாலா பொடி – 11/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2டீஸ்பூன்
சீரகம் – 1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு – தலா 1/2டீஸ்பூன்
உப்பு எண்ணெய்

செய்முறை :

• ப்ரோக்கோலியை கழுவி, பூக்களாக நறுக்கி வைக்கவும்.

• வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

broccoli poriyal

• பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, சீரகம் சேர்த்து பொரிய விட்டு க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்து வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் வதக்கி, தக்காளியும் சேர்த்து குழைய வதக்கவும்.

• நறுக்கிய ப்ரோக்கோலி பூக்கள் சேர்த்து பிரட்டி விடவும்.

• கால் கப் தண்ணீரை தெளித்து மசாலா பொடி, உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வேக விடவும். (பாத்திரத்தை மூடி வைத்தால் பச்சை நிறம் மங்கிவிடும், அதனால் அப்படியே வேகவிடவும்)

• காய் வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

• சுவையான ப்ரோக்கோலி பொரியல் தயார்.

• சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors