சன்னா பிரியாணி |Iyengar In Tamil Recipes

தேவையான பொருட்கள்:
சன்னா வெள்ளை – 150 கிராம்

வெங்காயம் பெரியது – 1

தக்காளி – 2

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 6 பல்

உப்பு – தேவைக்கு

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

மிளகாய்த்துள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – 1 ஸ்பூன்

தயிர் – 1 குழிக்கரண்டி

புதினா இலை – சிறிது

பாசுமதி அரிசி கழுவி வடித்தது உதிரியாக – 200 கிராம்

தாளிக்க

பட்டை,லவங்கம்,எலக்காய்,பிரியாணி இலை,முந்திரி,நெய் – 1ஸ்பூன் ,எண்ணைய் -தேவைக்கு

அலங்கரிக்க

வட்டமாக அரிந்த வெங்காயம்,தக்காளி,எலுமிச்சம் பழம்,கொத்தமல்லி,புதினா

விரும்பினால் காய்கறிகள் காரட் ,உருளை சேர்க்கலாம்.

பிராமண சமையல்

தயார் செய்யும் முறை:
வெள்ளை சன்னாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு போட்டுவேகவைக்கவும்.பின்னர் பாசுமதி அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து உதிரி உதிரியாக சாதம் வடிக்கவும்.ஆற விடவும்.பின் வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு இவற்றை மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணை,நெய் கலந்து சூடு செய்து லவங்கம்,பட்டை,எலக்காய்,பிரியாணி இலை,முந்திரி தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து, வதக்கவும்.மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.தயிர் சேர்க்கவும்.புதினா,வேகவைத்த சன்னா சேர்த்து கிளறி,இறுதியில் சாதம் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி,புதினா வட்ட வெங்காயம்,தக்காளி கொண்டுஅலங்கரிக்கவும்.பிரியாணி ரெடி.

Categories: Iyengar Samayal, Saiva samyal, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Sponsors