சாம்பார் சாதம்

Loading...

தேவையான பொருட்கள்

  • துவரம்பருப்பு – 1 / 4 கப்
  • சின்ன வெங்காயம் – 6
  • கடலைபருப்பு – 1 தேக்கரண்டி
  • வரமிளகாய்  – 2
  • வெந்தயம்  – 1 / 4 தேக்கரண்டி
  • கொத்தமல்லி  – 1 தேக்கரண்டி
  • பெருங்காய பவுடர்  – சிறிது
  • தக்காளி – 1
  • மிளகாய்த்தூள்  – 1 / 2 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள்
  • காரட்  –  1
  • பீன்ஸ்  – 3
  • முருங்கைக்காய்  – 1
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • நெய் – 1 மேசைக்கரண்டி

sambar-rice in tamil

செய்முறை

  1. சாதத்தை தனியாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. கடலைபருப்பு, வெந்தயம், வரமிளகாய் ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
  3. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. துவரம்பருப்பை கழுவி குக்கரில் போட்டு , தக்காளி , மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து  3  விசில் வரை விட வேகவிடவும்.
  5. இதில் சேர்க்க வேண்டிய காய்கள் காரட், பீன்ஸ், முருங்கைக்காய்  ஆகியவற்றை பொடியாக நறுக்கி  பருப்புடன்
  6. சேர்த்துக் கொள்ளவும்.
  7. இதில் உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்கு வேகவிடவும்.
  8. கடாயில் நெய் , ஊற்றி  கடுகு,கருவேப்பிலை, சின்ன வெங்காயம் தாளித்துக் கொட்டவும்.
  9. புளி கொதித்தவுடன்  வறுத்து செய்த பொடியை சாம்பாரில் சேர்க்கவும்.
  10. காய்கள் வெந்தவுடன் இறக்கி, வடித்த சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
Loading...
Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors