சாம்பார் பொடி|sambar podi in tamil

தேவையானப்பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 1 கப்
தனியா (மல்லி) – 3/4 கப்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சுண்டைக்காயளவு (கட்டி பெருங்காயம் இல்லையென்றால், பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்)
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு (விருப்பமானால்)
எண்ணை – 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:

ஓரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, மேற்கண்ட பொருட்கள் (மஞ்சள்தூள் தவிர) ஒவ்வொன்றையும், தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கட்டிப் பெருங்காயம் உபயோகித்தால், அதையும் வறுத்துக் கொள்ளவும். தூள் பெருங்காயம் என்றால் வறுக்கத் தேவையில்லை.

sambar podi in tamil
கடைசியில், வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக, அதே வாணலியில் கொட்டி, அத்துடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து, டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: மேற்கண்ட விதத்தில் செய்யும் பொடி 10 முதல் 15 நாட்களுக்கு வாசனை போகாமல் நன்றாக இருக்கும். சாம்பார் மற்றும் பொரிச்ச குழம்பு, கூட்டு செய்வதற்கு உபயோகிக்கலாம்.

எண்ணையில் வறுத்து அரைக்கும் பொடி, சற்று கொரகொரப்பாக இருக்கும். வத்த குழம்பு, காரக்குழம்பு செய்வதற்கு, பொடி நைசாக இருக்க வேண்டும். அதற்கு, எண்ணையில்லாமல், வெறும் வாணலியில் பொருட்களை வறுத்து, நைசாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors