சிக்கன் குருமா|Chicken Kurma In Tamil

Loading...

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1/2  கிலோ
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி  –  1
  • இஞ்சி பூண்டு  விழுது – 2  தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பில்லை  – சிறிது
  • மல்லிதழை  – 1 /4 கட்டு
  • புதினா – 1 /4 கட்டு
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் –  1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
  • சிக்கன் மசாலா – 1  தேக்கரண்டி
  • பட்டை  – 1 “
  • ஏலக்காய்  – 2
  • கிராம்பு  –  2

Capture

அரைக்க

  • தேங்காய்  –  3 மேசைக்கரண்டி
  • கசகசா  – 1 தேக்கரண்டி
  • முந்திரி  – 5
  • சோம்பு  – 1 /2 தேக்கரண்டி

செய்முறை

  1. கசகசா,முந்திரியை சிறிது  வெந்நீர்  ஊற்றி  10 நிமிடங்கள் ஊற வைத்து தேங்காய், சோம்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு  பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  4. பின் பச்சை மிளகாய்,கருவேப்பிலை,மல்லிதழை, புதினா , நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து  பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. தக்காளி வதங்கியவுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா சேர்த்து வதக்கவும்.
  8. சிக்கன் துண்டுகள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறிய தீயில் நன்கு வேக விடவும்.
  9. சிக்கன் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors