தோல் நோய்களை குணப்படுத்தும் சித்தரகம்

வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படும் ஒரு சில தாவரங்கள் மருத்துவ குணம் மூலிகைகளாக செயல்படுகின்றன. சித்தரகம் எனப்படும் புதர்வகைத்தாவரம் கூட இத்தகையதே. சித்தரகத்தின் வேர், வேர்பட்டை மற்றும் இலைகள் மருத்துவப்பயன் கொண்டவை. இவை வருடம் முழுவதும் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

தோல் நோய்களை குணப்படுத்தும் சித்தரகம்

வேர்ப்பகுதி கசப்பானது, இது வியர்வை தூண்டுவியாக செயல்படுகிறது. தோல்நோய்களான சொறி, படை, ஆகியவற்றின் மீது களிம்பாக பூசப்படுகிறது. இதே களிம்பு மூட்டுவலி போக்குவியாக பயன்படுகிறது. இந்திய மருத்துவத்தில் இலை மற்றும் வேர், வயிற்றுப்போக்கு போன்ற ஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகும். உடல் எடை குறைக்க உதவும். நேபாளத்தில் வேர் கசாயம் தலை வழுக்கையினைப் போக்க பயன்படுத்தப்படுகிறது.

சித்தரகத்தின் சாறு ஆப்பிரிக்க கண்டத்தில் பச்சைக் குத்துவதில் சாயமாக பயன்படுத்தப்படுகிறது. சித்தரகத்தின் மற்றொரு சிற்றினத்தின் வேர் பல்வலி மற்றும் முதுகுவலி ஆகியவற்றின் களிம்பாக உதவுகிறது. வேர் உள் மருந்தாக சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். மருத்துவ ஆலோசனையின்றி சாப்பிடும்போது கருச்சிதைவு ஏற்படும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam

Leave a Reply


Sponsors