நெத்திலி கருவாட்டுக் குழம்பு|fish fry curry Cooking Tips Tamil

Loading...

தேவையான பொருட்கள்

 • நெத்திலிக் கருவாடு – 15
 • கத்திரிக்காய் – 1
 • முருங்கைக்காய் – 1
 • சின்ன வெங்காயம் – 6
 • தக்காளி சிறியது – ஒன்று
 • பச்சை மிளகாய் – 2
 • மொச்சைக் கொட்டை –  1 /4 கப்
 • புளி – 1 /2  நெல்லிக்காய் அளவு
 • மிளகாய் தூள் – 3 /4   மேசைக்கரண்டி
 • மல்லிதூள் – 1 மேசைக்கரண்டி
 • வெந்தயம் – 1/2   தேக்கரண்டி
 • உப்பு – 1 /2  தேக்கரண்டி
 • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

img_1887

செய்முறை

 1. சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கவும். முருங்கைக்காயை இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.
 2. வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மொச்சைக் கொட்டையை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
 3. புளியில் 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும். அதிலேயே இரண்டாக கீறிய பச்சை மிளகாய், நறுக்கின தக்காளி, வறுத்து எடுத்த மொச்சை சேர்க்கவும்.
 4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் தாளித்து பின்னர்நறுக்கியசின்ன வெங்காயம் சேர்த்து  வதக்கவும்.பிறகு அதில் கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றவும்.
 5. இதனுடன் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய், முருங்கைக்காய் துண்டங்களை சேர்க்கவும்.
 6. வாணலியை மூடி வைத்து சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 7. அதன் பின்னர் கொதிக்கும் குழம்பில் கருவாட்டைச் சேர்த்து லேசாகக் கிளறி விடவும்.
 8. கருவாடு வெந்து நல்ல மணம் வர ஆரம்பித்தவுடன் இறக்கவும்.
Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors