பருப்பு பணியாரம்

சுவையான பருப்பு பணியாரம் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்

 • புழுங்கல் அரிசி(இட்லி அரிசி) – 1/2 கப்
 • பச்சரிசி – 1/2 கப்
 • உளுத்தம் பருப்பு – ஒரு கையளவு
 • துவரம் பருப்பு – ஒரு கையளவு
 • வெந்தயம் – 1 தேக்கரண்டி

தாளிக்க

 • எண்ணைய் – சிறிதளவு
 • கடுகு – 1/2 தேக்கரண்டி
 • கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
 • பச்சைமிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
 • வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1
 • தேங்காய் சிறு துண்டுகள் – 2 மேசைக்கரண்டி
 • பெருங்காயம் – சிறிதளவு
 • கருவேப்பிலை பொடியாக நறுக்கியது – ஒரு கொத்து

Chettinad Recipes intamil

செய்முறை

 1. அரிசி மற்றும் பருப்புகள், வெந்தயம் ஆகியவற்றை 3-4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
 2. ஊற வைத்துள்ள பொருட்களை தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
 3. ஒரு கடாயில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்  சேர்த்து வதக்கவும்.
 4. இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளாகாய் சேர்த்து வதக்கவும்.
 5. சூடு ஆறியதும் தாளித்த பொருட்களை மாவில் கொட்டி கலக்கி உடனே பணியாரம் ஊற்றலாம்.
 6. பணியாரத்துடன் சாப்பிட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.
Loading...
Categories: Chettinad Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors