பாட்டி வைத்தியம் பலன் தரும்|Tamil Pattivaithiyam

சின்ன உடல்நலக் குறைவு என்றால் கூட மருத்துவரை நாடி ஓடும் காலம் இது. ஆனால் அந்தக் காலத்தில், வீட்டில் பாட்டி செய்யும் வைத்தியமே பல உடல்நலக் குறைவுகளைக் குணப்படுத்திவிடும். பாட்டி வைத்தியத்துக்கு எப்போதுமே மகத்துவம் உண்டு. அந்தவகையில், தலைவலியைப் போக்க உதவும் பாட்டி வைத்திய முறைகளைத் தெரிந்துகொள்வோம்…
1. எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்.
2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்றாக அரைத்து, தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.
3. முட்டைக்கோஸ் இலைகளை நன்றாக நசுக்கி, ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையில் ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்ட வேண்டும்.
4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும், கால்களையும் சுடுநீரில் விடவும். இந்த முறை, ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்.
பாட்டி வைத்தியம் பலன் தரும்
5. அரைத் தேக்கரண்டி கடுகுப் பொடியை, மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்தக் கரைசலை மூக்கில் விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.
6. பத்து அல்லது பதினைந்து பாதாம்பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.
7. 200 மி.லி. பசலைக் கீரைச் சாறு- 300 மி.லி. கேரட் சாறு அல்லது 100 மி.லி. பீட்ரூட் சாறு- 100 மி.லி. வெள்ளரிச் சாறு இந்த இரண்டு கலவைகளில் ஒன்றைத் தினமும் பருகி வந்தால் ஒற்றைத் தலைவலி அண்டாது.
8. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்) மட்டும் பருகலாம். நீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.
9. தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரால் தலையில் ஒத்தடம் தரலாம்.
10. முழுக் கோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Pattivaithiyam

Leave a Reply


Sponsors