பாட்டி வைத்தியம் வெத்தலை|paati vaithiyam vethalai

இப்பல்லாம் வெத்தலை, பாக்குக்கு பதிலா பீடாவைத்தானே
விரும்பி சாப்பிடறாங்க… அதான் கேட்டேன்!
ஹெவியான விருந்து சாப்பாட்டை
வெத்தலை சுலபமா செரிக்க வைக்கும்.
இதுமட்டுமில்ல, வெத்தலைக்கு இன்னும் ஏராளமான
மருத்துவ குணங்கள் உண்டு.

டென்ஷன் காரணமா தாங்க முடியாத தலைவலினு வைங்க! ஆறு வெத்தலையை அரைச்சு, அந்த விழுதை நெத்தியில பத்து போட்டு, அரைமணி நேரம் அப்படியே கண்ணை மூடி படுங்க. தலைவலி டாட்டா காண்பிச்சு ஓடிடும்.
அஞ்சு வயசு வரைக்கும் சில குழந்தைகளுக்கு சளி பிடிச்சுச்சுன்னா மூச்சிரைப்பு, இருமல்னு அவதிப்படும். அதுக்கு, வெத்தலையில கடுகு எண்ணெய் பூசி, லேசா சூடு காட்டி குழந்தை மார்புல வையுங்க. இந்த மாதிரி நாலைஞ்சு முறை செஞ்சா போதும்… நிவாரணம் கிடைக்கும்.
பெரியவங்களும்கூட வெத்தலைச் சாறும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து குடிச்சா, கபம் கரையும்.

Betel Leaf pattivaithiyam,vethaliyan nanmaigaigal

போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காத அம்மாக்களுக்கும் வெத்தலை ஒரு அருமருந்தா இருக்கு.
வெத்தலையில ஆமணக்கு எண்ணெய் பூசி, லேசா வாட்டி, மார்புல வெச்சு கட்டிக்கிட்டு இரவு படுத்து எழுந்தா, மறுநாள் தாய்ப்பால் நல்லா சுரக்கும்.
சில அம்மாக்களுக்கு மார்பகத்துல பால் கட்டிக்கிட்டு வலியும் வீக்கமும் ஏற்படும். அதுக்கு, வெறும் வாணலில வெத்தலையை போட்டு லேசா வதக்கி, பொறுக்கும் சூட்டுல மார்பகங்கள்ல கட்டினால் வலியும் வீக்கமும் குறையும்.
சரியா பசியெடுக்காம, சாப்பிடவே சங்கடப்படுற குழந்தைகளுக்கு மூணு வெத்தலையோட சாறுல கொஞ்சம் மிளகுத்தூள் போட்டு கஷாயம் காய்ச்சி குடிக்க கொடுத்துப் பாருங்க. கபகபனு பசியெடுத்து, நீங்க போட்டதை மூச்சு காட்டாம சாப்பிட்டுட்டுப் போயிடுவாங்க.
பொதுவா, ஒரு டேபிள் ஸ்பூன் வெத்தலைச் சாறும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனும் கலந்து தினம் ரெண்டு வேளை அருந்தி வந்தா, உடல் பலவீனமும் நரம்புத் தளர்ச்சியும் தானாகவே நீங்கிடும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Pattivaithiyam

Leave a Reply


Sponsors