பெண்களுக்கான எளிய பாட்டி வைத்தியம்|easy tips Pattivaithiyam

வெள்ளைக் குண்டுமணி வேர், வெள்ளைச் சாரணை வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைப்பூண்டு, திப்பிலி, மிளகு ஆகிய ஒவ்வொன்றிலும் கால் ரூபாய் எடையளவு எடுத்து துளசி சாற்றில் அரைத்து தண்ணீரில் கலக்கி, மாதவிலக்கு ஏற்பட்ட மூன்றாம் நாள் சாப்பிட கொடுத்து வந்தால் கருப்பையிலுள்ள பூச்சிகள் குறையும்.

• தும்பை இலையை எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும். அதை எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து தொடர்ந்து ஏழு நாட்கள் காலையில் சாப்பிட கொடுத்து வந்தால் பெரும்பாடு குறையும்.

 

பெண்களுக்கான எளிய பாட்டி வைத்தியம்

• ஆல மரத்தின் பட்டைகளை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து 1 ஸ்பூன் அளவு பாலில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் கருப்பை கோளாறு குறையும்.

• மலைவேம்பு இலை 200 கிராம், பூ, பட்டை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி, நான்கில் ஒரு பங்காக வற்றும் போது இறக்கி வடிகட்டி இரண்டு வேளை வீதம் சாப்பிட வேண்டும். மாத விலக்கு ஏற்படும் நாட்கள் நீங்கலாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பையிலுள்ள புழுக்கள் குறைந்து குழந்தைபேறு உண்டாகும்.

• 1 கட்டு அளவு மணத்தக்காளி இலைகளை எடுத்து அதனுடன் 5 சின்ன வெங்காயம், 5 பூண்டு பல், சிறிதளவு சீரகம் சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து கொதித்ததும் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கலந்து மீண்டும் கொதிக்க வைத்து சூப் போல செய்து அடிக்கடி குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Pattivaithiyam

Leave a Reply


Sponsors