மீன் கிரேவி|fish gravy Recipe in tamil

தேவையானவை:

நெய் மீன் – 350 கிராம்

குடை மிளகாய் – ஒன்று

தக்காளி – அரை கிலோ

வெண்ணெய் – கால் கிலோ

நறுக்கிய பூண்டு – 20 கிராம்

பட்டை – மூன்று கிராம்

கிராம்பு – மூன்று கிராம்

லெமன் சாறு – ஒரு கிராம்

8 – 9 சாஸ் – 20 கிராம் (கடைகளில் கிடைக்கும்)

வெள்ளை மிளகுப் பொடி – 10 கிராம்

ரோஸ்பெரி பவுடர் – ஐந்து கிராம்

(கடைகளில் கிடைக்கும்)

செலரி இலை – 10 கிராம்

பிரியாணி இலை – இரண்டு

உப்பு – தேவையான அளவு

Fish Gravy in tamil,samyal kurippu Fish Gravy

செய்முறை:

மீன் துண்டுகளை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். தக்காளியை தண்ணீரில் வேக வைத்து, தோலுரித்து மிக்சியில் அரைத்து வடிகட்டி, சாறை மட்டும் எடுத்து கொள்ளவும். விதையை பயன்படுத்தக் கூடாது.

வாணலியில் வெண்ணெயை ஊற்றி சூடான பின் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, நறுக்கிய பூண்டு சேர்த்து மிளகுப் பொடி, செலரி இலை, ரோஸ்பெரி பவுடர் மற்றும் தக்காளி சாறு, உப்பு சேர்த்து வதக்கவும்.கொஞ்சம் கெட்டியாக வரும் போது, மீன் துண்டுகளை சேர்த்து கிரேவி பதத்தில் வதக்கி இறக்க வேண்டும்.

இல்லாவிட்டால், நன்கு கெட்டியாகிய பின், இறக்கி விடலாம்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors