முளை கோதுமை தேங்காய்பால்

தேவையான பொருட்கள் :

முளை கோதுமை மாவு பவுடர் – 1 ஸ்பூன்

வெல்லம் அல்லது தேன் – சுவைக்கு

ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

தேங்காய் பால் – அரை கப்

முளை கோதுமை தேங்காய்பால்

செய்முறை:

* விதைக் கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியால் கட்டி முளைக்கவிடவும். இதைக் காயவைத்து வறுத்து அரைக்கவும். அரைத்த மாவை சலிக்காமல் பாட்டிலில் பத்திரப்படுத்தவும். தேவையானபோது ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து, அதனுடன் இனிப்புக்கு வெல்லம், தேன், ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.

* இதனுடன் தேங்காய் பால் சேர்த்தும் பருகலாம். அற்புதமான சுவையுடன் இருக்கும்.

பலன்கள்: புற்றுநோய்க்கு நல்ல மருந்து. உடனடியாக ஜீரணமாகும். எலும்பு உறுதியாகும். உடல் பலம் பெருகும். உயர் ரத்த அழுத்தம் குறையும். உடல் பருமன், தொப்பை, ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் அருந்தலாம்.

Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors