ரவா இட்லி

தேவையான பொருட்கள்

 • வறுத்த ரவை(வெள்ளை ரவை)  – 1 கப்
 • தயிர்  – 2 கப்
 • காரட்  – 1
 • பட்டாணி  – 10
 • பச்சை மிளகாய்  – 3
 • கடுகு – 1 / 2 தேக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
 • கடலைபருப்பு – 1 தேக்கரண்டி
 • எண்ணெய்  – 1   மேசைக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு

rava idli tamil cooking tips

செய்முறை

  1. காரட், பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 1. பிறகு காரட், பட்டாணி, பச்சைமிளகாய்  போட்டு வதக்கவும்.
 2. வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.
 3. தயிரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
 4. ரவை,தயிர்,  உப்பு மற்றும் வதக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
 5. இந்த கலவையை  குறைத்து 30 நிமிடங்கள் வைத்த பிறகு இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி  ஊற்றவும்.
 6. 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு
ரவா இட்லிக்கு  தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors