வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்

 • வேக வைத்து குளிர வைத்த சாதம் – 4 கப்
 • பூண்டு பொடியாக நறுக்கியது – 1 பல்
 • வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது – 2
 • பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கையளவு
 • பொடியாக நறுக்கிய காய்கறிகள் – கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டாணி – 1 கப்
 • மிளகுத்தூள் – தேவையான அளவு
 • வினிகர் – 3/4 மேசைக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு
 • நல்லெண்ணெய் / ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை

 1. சாதத்தை வேக வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்.
 2. காய்கறிகளை 2  நிமிடங்கள் மட்டும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
 3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் வெங்காயத்தாளில் வெள்ளைப் பகுதியை மட்டும் சேர்த்து அதிக தீயில் 1 நிமிடம் வரை வதக்கவும்.

veg fried rice recipe in tamil

 1. பின் வேக வைத்து வைத்துள்ள காய்கறிகள் சேர்த்து அதிகமான தீயில் 3 – 4 நிமிடங்கள் வரை வதக்கவும்.
 2. உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
 3. வேக வைத்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும். கடாயை சுற்றிலும் சாதத்தை பரப்பி, மிதமான சூட்டில் அப்படியே ஒரு நிமிடம் வரை வைக்கவும்.
 4. மீண்டும் சாதத்தை நன்கு கலக்கி, கடாயை சுற்றிலும் சாதத்தை பரப்பி, மிதமான சூட்டில் அப்படியே ஒரு நிமிடம் வரை வைக்கவும்.
 5. இறுதியாக வினிகர் சேர்த்து 30 வினாடிகள் வரை தொடர்ந்து வதக்கவும்.
 6. அடுப்பை அணைத்து விட்டு, வெங்காயத்தாளின் நறுக்கிய தாள் பகுதியை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors