Loading...

தேவையான பொருட்கள்

  • வெண்டைக்காய் – 1 /2 கிலோ
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் – 4  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
  • புளிக்கரைசல் – 2 மேசைக்கரண்டி
  • தேங்காய் விழுது – 3 மேசைக்கரண்டி
  • நல்லெண்ணெய் – 3  மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

வெண்டைக்காய் புளிக்குழம்பு

செய்முறை

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம்

    சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து 5  நிமிடங்கள் வரை வதக்கவும்.

  2. பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து 10  நிமிடங்கள் வதக்கவும்.
  3. பின்னர் புளிக்கரைசல் மற்றும் 11/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வெண்டைக்காய் வேகும் வரை நன்கு வேக விடவும்.
  4. கடைசியாக தேங்காய் விழுது சேர்த்து 5  நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
  5. வெண்டைக்காய் புளிக்குழம்பு சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors