ஆட்டுக்குடல் குழம்பு|aatu kudal kulambu in tamil

தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த குடல் – 1
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு- 4 பல்
சின்ன வெங்காயம் – 4
தேங்காய்துருவல் – 1/2 கப்
மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
சோம்பு,சீரக தூள் – 1 தேக்கரண்டி
பட்டை – 2 துண்டு
லவங்கம் – 2
ஏலம் – 1
சோம்பு – சிறிதளவு
நல்லஎண்ணெய் – 50 மி .லி
புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம்(அரிந்தது) – 1/2 கப்
தக்காளி(அரிந்தது) – 3

aatu kudal kulambu in tamil,aatu samyal
செய்முறை:
* முதலில் இஞ்சி,பூண்டு,சின்ன வெங்காயம்,தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும்.
* பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,லவங்கம்,ஏலம் போட்டு தாளித்து அரிந்த பெரிய வெங்காயம்,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியவுடன் அரைத்த இஞ்சி,பூண்டு விழுது,மிளகாய்,மல்லி,சோம்பு,சீரக பொடிகளை சேர்த்து வதக்கவும்.
* புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்க்கவும்.
* தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது,ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும்.
* குக்கரில் 11 விசில் அடித்தவுடன் இறக்கவும்.
வயிற்று புண் தீர்க்கும் குடல் குழம்பு ரெடி!

Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors