ஆப்பம்|appam recipe in tamil

தேவையானவை:

பச்சரிசி – 1 கப்,

புழுங்கலரிசி – 1 கப்,

உளுத்தம்பருப்பு – கால் கப்,

வெந்தயம் – 1 டீஸ்பூன்,

ஜவ்வரிசி – 3 டீஸ்பூன்,

உப்பு – 1 டீஸ்பூன்,

எண்ணெய் – கல்லில் தடவ தேவையான அளவு,

தேங்காய் (துருவியது) – 1 மூடி,

சர்க்கரை – அரை கப்.

appam-recipe,appam recipe in tamil,appam recipe samyal kurippu,cooking tips appam recipe in tamil

செய்முறை:

அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஜவ்வரிசி வேகும்வரை காய்ச்சி, ஆறியதும் மாவுடன் கலந்து வைக்கவும் (12 மணி நேரம்). காலையில் நன்கு மாவை கலக்கி விடவும்.

தேங்காயைத் துருவி, மிக்ஸியில் போட்டு, முதலில் கெட்டிப்பால், பிறகு தண்ணீர்பால் என மொத்தம் இரண்டரை டம்ளர் எடுக்கவும். சர்க்கரை சேர்த்து அதைக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லில் ஒரு சிறிய துணி கொண்டு, எண்ணெயைத் தொட்டு தடவி பின்னர் ஆப்ப மாவை எடுத்து ஆப்பமாக ஊற்றி எடுத்து, அதில் தேங்காய்ப்பாலை விட்டு பரிமாறவும்.

குறிப்பு: ஜவ்வரிசி காய்ச்சி ஊற்றுவதற்கு பதில், 1 கைப்பிடி பச்சரிசி சாதம் போட்டும் மாவுடன் ஆட்டலாம். ஆப்ப சோடா சேர்க்கத் தேவையில்லை

Categories: Dosai recipes in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors