அவல் அடை உப்புமா|aval adai upma in tamil

தேவையான பொருட்கள்

அவல் – 1 கப்
அடைக்கலவை – 1 கப்
கடுகு – 1 ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 10 பற்கள்
பெரிய வெங்காயம் – 2
க.எண்ணை – 4 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – சுவைக்கேற்ப

aval adai upma in tamil

செய்முறை:

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அவலை நீர் விட்டுக்கழுவி, சிறிது நீரைத் தெளித்து ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகைத் தாளித்து அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியபின் அதனுடன் அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

பிறகு இதில் அடைக்கலவை, ஊறிய அவல், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இறக்கவும். இதோ…சாப்பிடத் தயாராகிவிட்டது. சுவையான அவல் அடை உப்புமா!

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors