அயிரை மீன் குழம்பு|ayira meen kuzhambu samayal kurippu

தேவையான பொருட்கள்:

(ஐந்து பேருக்கு)

அயிரை மீன் – அரை கிலோ
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
மிளகாய் வத்தல் – 25 கிராம்
சீரகம் – 25 கிராம்
மல்லி – 10 கிராம்
புளி – 75 கிராம்
சின்ன வெங்காயம் – 125 கிராம்
தேங்காய் – ஒன்று
நல்லெண்ணெய் – 125 மி.லி.

aiyrai-fish-curry in tamil,ayira meen kuzhambu samayal tamil ,cooking tips tamil recipe ayira meen kuzhambu,tamil nadu ayira meen kuzhambu seimurai

ஒரு பாத்திரத்தில் மீன்களைப் போட்டு தண்ணீர் ஊற்றி, அத்துடன் கொஞ்சம் பாலும் சேர்க்கவேண்டும். கொஞ்ச நேரம் இந்த தண்ணீர் – பால் கலவையில் மீன் இருக்கவேண்டும். அப்படி செய்தால் மீனின் உடல், குடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத குறுமணல் கூட வெளியே வந்துவிடும். பிறகு மீன்களை அலசி எடுத்து இறுதியாக உப்பு போட்டு மீன்களை நன்கு கழுவ வேண்டும். மீன் மீதான வழுவழுப்பு மாறும் வரை இப்படி தேய்க்கவேண்டும்.

அடுத்து புளியை கரைசலாக்கி அதை வடிகட்டி ரெடியாக வைத்திருக்க வேண்டும். வத்தல், மல்லி, சீரகம், மஞ்சள் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த மசாலாவை புளிக்கரைசலில் கரைக்கவேண்டும். துருவி வைத்த தேங்காயையும் வெங்காயத்தையும் நைசாக அரைத்து இந்த புளி கரைசலோடு சேர்க்கவேண்டும். பிறகு புளிக் கரைசலில் நல்லெண்ணெய்யை கலக்கி அதை அடுப்பில் கொதிக்கவைக்கவேண்டும். மசாலா வாசனை குறையும் வரை கொதிக்கவைக்கவேண்டும். அப்படி கொதித்து வரும்போது அயிரை மீனை அதில் போடவேண்டும். பதினைந்து நிமிடங்களில் குழம்பு ரெடியாகிவிடும். எடுத்து பரிமாறலாம்

Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors