பீன்ஸ் கூட்டு|beans kootu in tamil

தேவையானவை
டபுள் பீன்ஸ் ஊற வைத்தது 1 கப்
கடலைபருப்பு 2 தே .க
உப்பு தேவைக்கேப்ப
அரைக்க தேங்காய் துறுவியது 1/4 கப்
உளுத்தம் பருப்பு 1 தே.க
மிளகு 1/4 தே.க
வற்றல் மிளகாய் 1
சீரகம் 1/2 தே.க தாளிக்க
எண்ணெய் 1 தே.க
கடுகு 1/2 தெ.க
வற்றல் மிளகாய் 1
உளுத்தம் பருப்பு 1/4 தே.க
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காயத்தூள் 1/4 தே.க
beans kootu,samyal kurippu beans kootu,cooking tips in tamil beans kootu
செய்முறை
டபுள் பீன்ஸை 24 மணிநேரம் ஊறவைத்து எடுக்கவும்.( எங்க வீட்டில் கடலைபரூப்பு பதில் வேர்க்கடலை சேர்த்தும் செய்வதுண்டு )

ஒரு கடாயில் அரைக்கயுள்ளதை தேங்காய தவிர மற்ற எல்லாவற்றையும் நல்ல மணம் வரும் வரை வறுத்தெடுக்கவும்(ட்ர ரோஸ்ட்). பாத்திரத்தில் டபுள் பீன்ஸ்+கடலைபருப்பு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

தேங்காயும் சேர்த்து வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களோடு அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதோடு கொஞ்சம் தண்ணிர்
சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் தாளிக்கயுள்ளதை சேர்த்து தாளித்தெடுக்கவும்.
இது சாதத்தோடு சேர்த்து சாப்பிட நல்ல ஹெல்தியான கூட்டு ரெடி. இதேயே சப்பாத்தி, பூரிக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடனும் என்றால்
கொஞ்சம் மாசாலாவை மாற்றி செய்தால் போதும் வெங்காயம், தக்காளி 1 எடுத்து அரிந்து அதை நன்றாக வதக்கி பூண்டு, இஞ்ஞி பச்சமிளகாய் விழுது சேர்த்து வதக்கி கொஞ்சம் கரம் மசாலா அல்லது கிச்சன் கிங் மசாலா + கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக வதக்கி காரத்திற்கேற்ப்ப சில்லி பௌடர் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதிக்கி விட்டு தளர்வாக வேண்டுவர்கள் மேலும் கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான ப்ரோட்டின் சப்ஜி ரெடி.
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors