கோழி குழம்பு|chettinad chicken kulambu seivathu eppadi

தேவையானவை :

கோழி – 1/2 kg
சின்ன வெங்காயம் – 12
பூண்டு – 10 பல்
தக்காளி – 2
மஞ்சள் தூள்
மிளகாய் தூள் – 2 or 3 spoon

விழுதாய் அரைக்க :

Few பெ.சீரகம், கசகசா, பூண்டு – 3 பல், இஞ்சி, தேங்காய் துருவல் – 5 spoon

 

Chettinad Chicken Kuzhambu in tamil cooking tips

செய்முறை :

வானலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, பிறகு பூண்டையும், வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்துக் கோழியை சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளியையும் வதக்கலில் சேர்க்கவும்.

கோழி நன்றாக வதங்கியபின் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து நாலைந்து நிமிடங்கள் கிளற விடவும். தேவையான அளவு நீர் சேர்த்து, சிறிது கிளறி மூடி வைக்கவும்.

கோழி முக்கால்வாசி வெந்தபின், அரைத்த விழுதைச் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இவை இட்லி, தோசை, சாதத்திற்கு ஏற்ற side dish-ஆக இருக்கும்.

Loading...
Categories: Chettinad Recipes Tamil, Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors