செட்டிநாடு கோழி பொரியல் |chettinad chicken poriyal

தேவையானவை :

கோழி – 1/2 k.g.
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 10 பல்
வர மிளகாய் – 5 (Alternate – தனி மிளகாய்த் தூள் – 1 teaspoon)
இஞ்சி – சிறிதளவு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
பட்டை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/2 teaspoon

 

chettinad chicken poriyal in tamil

செய்முறை :

வர மிளகாயை சிறிது நேரம் தண்ணீரில் ஊர வைக்கவும். Mixie-ல் மிளகாயை முதலில் அரைத்துக் கொள்ளவும். அதனோடு நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிய கோழியில், மஞ்சள் தூள் மற்றும் அரைத்ததையும் சேர்த்து நன்கு கிளறி மூடிவைக்கவும். சில மணி நேரங்கள் கழித்து … (குறைந்தது 1 மணி நேரம்)

குக்கரில் எண்ணையிட்டு, கிராம்பு, எலக்காய், பட்டை போட்டு, பின்பு கோழி கலவையை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

ப்ரஷர் நீங்கியபின் குக்கரைத் திறந்து, தண்ணீர் வற்றும் வரை கிளரிவிடுங்கள். சுவையான கோழி பொரியல் ரெடி. பின் அலங்கரித்துப் பறிமாரவேண்டியது தான் 🙂

Categories: Chettinad Recipes Tamil, Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors