செட்டிநாடு பிஸிபேலாபாத்|chettinad rice recipes in tamil

சிம்பிளா சொன்னா சாம்பார் சாதம் ! ஆனால் சாதத்தில், சாம்பாரை ஊற்றி பிசைவதை விட, பிஸிபேலாபாத்திற்கு சுவை சற்று கூடுதல் தான். செய்முறையும் கொஞ்சமோ கொஞ்சம் அதிகம் தான் ! பரவலா கர்நாடகத்தில் தோன்றியதாக இணையத்தின் மூலமும் நண்பர்களின் மூலமும் அறிகிறோம். சில ஆண்டுகளாகவே நம்ம ஊரிலும் ஊடு கட்ட ஆரம்பித்திருக்கிற‌து பிஸிபேலாபாத் :)) எங்க வீட்டுக் குட்டீஸின் பேவரிட் இந்திய உணவுகளில் ஒன்று.

இர‌ண்டு க‌ட்ட‌ங்க‌ளாக‌ செய்முறையைப் பிரித்து (மேய்ந்து….) எடுத்துக் கொள்வோம். முதலில் பிஸிபேலாபாத் பொடி அப்புற‌ம் பிஸிபேலாபாத்.

பிஸிபேலாபாத் பொடி

தேவையானவை:

 • வரமிளகாய் – 6
 • வெந்தயம் – சிறிதளவு
 • கடுகு – சிறிதளவு
 • சீரகம் – சிறிதளவு
 • பட்டை – சிறிதளவு
 • கிராம்பு – 2
 • உளுத்தம் பருப்பு – 2 டீஸ்ப்பூன்
 • கடலைப் பருப்பு – 2 டீஸ்ப்பூன்
 • மல்லி – 2 டீஸ்ப்பூன்
 • தேங்காய் – சிறிதளவு, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்

chettinad rice recipes in tamil

செய்முறை:

 • வாணலில் (எண்ணை விடாமல்) வரமிளகாய், வெந்தயம், கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்.
 • கடுகு வெடிக்கையில், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 • ஆறிய பின், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 • பிஸிபேலாபாத் பொடி ரெடி.

பிஸிபேலாபாத்

தேவையானவை:

 • அரிசி – 1 கப்
 • துவரம் பருப்பு – 1/2 கப்
 • தக்காளி ‍ 1
 • பீன்ஸ் – 5
 • வெண்டைக்காய் – 2
 • கேரட் ‍ 1
 • கத்தரிக்காய் – 2
 • உருளைக்கிழங்கு ‍ 1
 • காலிஃப்ளவர் – சிறிது
 • முருங்கைக்காய் – 1
 • புளி – சிறிது
 • உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

 • கடுகு – சிறிதளவு
 • சீரகம் – சிறிதளவு
 • முந்திரிப் பருப்பு – 3~5
 • பெருங்காயம் – சிறிதளவு
 • கறிவேப்பிலை – 10~15

செய்முறை:

 

 • துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, சீரகம், முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். சிறிது நேரத்தில் வரமிளகாயைக் கிள்ளிப் போடவும்.
 • வெங்காயம், பச்சை மிளக்காய் சேர்த்து வதக்கவும்.
 • அரிந்த காய்கறிகளை சில நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.
 • மஞ்சள் பொடி சேர்த்து, ஊற வைத்த பருப்பு, அரிசி சேர்த்து, அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
 • அரிசி, காய்கறிகள் பாதி வெந்த நிலையில் தக்காளி சேர்க்கவும்.
 • முக்கால்வாசி வெந்த பின், அரைத்து வைத்த பிஸிபேலாபாத் பொடி, உப்பு, புளிக் கரைசல் சேர்க்கவும்.
 • தேவை எனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
 • காய்கறிகள் நன்கு வெந்து, சாதமும் வெந்த நிலையில் கொத்தமல்லி தூவி, விரும்பினால் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும்.
 • சூடான, சுவையான …. ஆங் … பிஸிபேலாபாத் ரெடி :)) சுவைத்து மகிழுங்கள் !
Categories: Chettinad Recipes Tamil, Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors