செட்டிநாடு சுவையான ஸ்பைஸி சிக்கன்|chettinad spicy chicken in tamil

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ
வெங்காயம் – 2 பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி – 2 பெரியது
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியாதூள் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: 

எண்ணை – 100 மி.லி
பட்டை – இரண்டு அங்குலம் இரண்டு
ஏலக்காய் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது

கடைசியில் தூவ:

மிளகு – 1 டீஸ்பூன் (பொடித்தது)
எலுமிச்சை – 2
கருவேப்பிலை – சிறிது
கொத்துமல்லி – சிறிது
பட்டர் – 1 டேபிள்ஸ்பூன்

 

chettinad spicy chicken cooking tips in tamil

செய்முறை:

* சிக்கனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு தண்ணீ­ரை வடித்து வைக்க வேண்டும்.

* ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை, ஏலக்காய், மிளகு, கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.

* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்லா வதக்கி கலர் மாறியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள், போட்டு வதக்கி சிக்கனை போட்டு அதிக தீயில் கிளறவேண்டும்.

* பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு உப்பும் சேர்த்து நல்லா கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும்.

* பிறகு ஒரு டம்ளர் தண்­ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.

* கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு ஊற்றி கொத்து மல்லி தழை தூவி இறக்க வேண்டும்.

Categories: Chettinad Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors