சிக்கன் பிரியாணி|chicken biryani in tamil

தேவையானவைபாசுமதி அரிசி – அரை கிலோ சிக்கன் – அரை கிலோ வெங்காயம் – கால் கிலோ தக்காளி – கால் கிலோ தயிர் – கால் டம்ளர் இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டரை மேசைக்கரண்டி கொத்தமல்லி – கால் கட்டு

புதினா – எட்டு இதழ்
பச்சை மிளகாய் – நான்கு
மிளகாய் தூள் – 1 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை – பாதி பழம்
பட்டை – ஒரு இன்ச் அளவு ஒன்று
கிராம்பு – இரண்டு
ஏலம் – ஒன்று
எண்ணெய் – கால் டம்ளர்
நெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

செய்முறைமுதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.
எலும்புடன் சேர்ந்த சிக்கனை (அரை கிலோ) கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

Chicken Biryani Tamil

எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி போடவும் பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.

இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும். சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது. தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.

தக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு கிளறி தயிரையும் சேர்த்து நல்ல வேக விடவும்.

மூடி போட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.Ø நல்ல வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு அரிசி உலை கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கொஞ்சமாக லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கவும்.

(அப்ப தான் சாதம் உதிரியாக வரும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.) ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கீழே கொட்ட வேண்டாம்)20 நிமிடம் தம்மில் விட்டு உடையாமல் கிளறி இரக்கவும்.

Loading...
Categories: Biryani Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Rice Recipes In Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors