பிரெட் வடை|bread vadai in tamil

பிரெட் – 6 ஸ்லைஸ்,
கடலைப் பருப்பு – 1 கப்,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி, பூண்டு, சோம்பு – தேவைக்கேற்ப,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிது.

bread vada in tamil,bread vadai samayal kurippu,bread vada cooking tips in tamil,how to make bread vada  recipe tamil nadu

கடலைப் பருப்பை ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதில் பிரெட்டை தூளாக்கி போடவும். அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து இஞ்சி, பூண்டு, சோம்பு நசுக்கிப் போட்டு கிளறி, வடை மாவு பதத்துக்குக் கலக்கவும். கொத்தமல்லி தூவவும். அதை வடையாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Loading...
Categories: Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors