மீன் உருண்டை குழம்பு|meen urundai kuzhambu in tamil

தேவையான பொருட்கள்:

மீன் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 1
இஞ்சி துண்டு – 1
கொத்தமல்லித்தழை – 2 கைப்பிடி
சிறிதளவு புதினா தழை
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – டீஸ்பூன்
முட்டை – 1

meen urundai kuzhambu,fish kulambu tamil,meen urundai kuzhambu samayal seimurai

உருண்டை செய்ய: சதைப் பற்றுள்ள அரை கிலோ மீனை வேகவைத்து தோல், முள் நீக்கி உதிர்த்து வைக்க வேண்டும். இப்படி உதிர்த்து வைத்துள்ள மீனை மிக்சியில் அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டித் துண்டுகளில் பிரட்டி சூடான எண்ணையில் பொரித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை: வாணலியில் 4 டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, பொடியாக நறுக்கிய 2 வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, 4 பல் துண்டு, இரண்டும் அரைத்த விழுது போட்டு வதக்கி, தோல் எடுத்து பொடியாக நறுக்கிய 3 தக்காளி சேர்த்து வதக்கவும். நெய் மேலே மிதக்கும்போது சுடுதண்ணீர் ஒரு கப் விட்டு அது கொதிக்கும்போது பொரித்து வைத்துள்ள மீன் உருண்டைகள், கரம் மசாலா, சீரகம் போட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும். நெய் மேலே மிதக்கும்போது கால் டம்ளர் பால், கொஞ்சம், குங்குமப்பூ போட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும். இறக்கி கிரீம், கொத்தமல்லித் தழையால் அலங்கரித்து பரிமாறவும். அரைத்த முந்திரி பருப்பு விழுது அரைகப், சேர்த்துக் கொண்டால் கிரேவி நல்ல மணத்தோடும் மலாய் ஜோப்தா போல அதிக ருசியாகவும் இருக்கும்.

Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors