ஸ்பைசி மீன் குழம்பு |cooking tips in tamil spicy fish kuzhambu

தேவையானவை:
மீன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1
புளி – 1 எலுமிச்சை அளவு
வெள்ளை எள்ளு – 2 tsp
தேங்காய் – 1 பத்தை
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1 tsp
தனியா தூள் – 2 tsp
மஞ்சள் தூள் – 1/4 tsp
சீரக தூள் – 1/4 tsp
சோம்பு தூள் – 1/2 tsp

தாளிக்க:
நல்லெண்ணெய் – 3 tsp
கடுகு – 1/2 tsp
சீரகம் – 1 tsp
வெந்தயம் – 1 tsp
பெருங்காயம் – 1 பின்ச்
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசறி மீண்டும் ஒரு முறை கழுவி வைக்கவும். இது மீனின் வாடையை போக்கும்.

spicy fish kuzhambu,samayal kurippu spicy fish kuzhambu,spicy fish kuzhambu recipe in tamil ,karameen  kuzhambu tips tamil

எள்ளு மற்றும் வெங்காயத்தை சிறிது எண்ணையில் வதக்கி அதனுடன் தேங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.

அதனுடன் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

இப்பொழுது அரைத்த விழுது, புளிதண்ணீர், தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்து மசாலா வாசனை நீங்கியவுடன் சுத்தம் செய்த மீனை போட்டு 5 நிமிடங்கள் மூடி போட்டு வெந்த பின் இறக்கவும்.

சுவையான மீன் குழம்பு ரெடி.

குறிப்பு:

இதில் கட்டாயம் வெந்தயம் சேர்க்கவும்.
தக்காளி சேர்க்க தேவை இல்லை. அதனால் கொஞ்சம் கூடுதலாக சுவைக்கேற்ப புளி சேர்க்கவும்.
இதில் எள்ளு சேர்த்து வறுத்து அரைப்பதால் குழம்பு நல்ல வாசத்துடன், ருசியுடனும் இருக்கும்.

Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors