கருணைக்கிழங்கு பொரித்த குழம்பு|karani kilangu kulambu in tamil

தேவையான பொருட்கள் –

கருணைக்கிழங்கு – 1/2 கிலோ
பெ.வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 4
வெந்தயம் – ½ டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்
கறிவேற்பிலை – தேவையான அளவு.
மிளகாய்ப் பொடி – 1டீஸ்பூன்
தனியாப் பொடி – 1டீஸ்பூன்
சீரகப்பொடி – ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
தேங்காய்ப் பால் – 2 டேபுல் ஸ்பூன்

வறுத்து பொடித்து எடுக்க – பட்டை, சோம்பு, கராம்பு
பொரிக்க எண்ணை – 5 டேபுல் ஸ்பூன்
புளி – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
தண்ணீர் – ½ கப்.

கிழங்கின் தோலை சீவி எடுக்கவும். பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு கழுவி எடுங்கள்.
பிறகு மெல்லிய சிறுதுண்டுகளாக வெட்டுங்கள்.

karunai-kizhangu-kuzhambu-karunai-kilangu-kulambu-recipe,karani kilangu kulambu in tamil ,karani kilangu kulambu samyal kurippu

கை அரிப்பெடுத்தால் கையில் எலுமிச்சம் புளி அல்லது எண்ணை தடவி வெட்டலாம்.

வெங்காயம்,பூண்டு இரண்டையும் சிறியதாக வெட்டுங்கள். மிளகாயை கீறிவையுங்கள்.

வெறும் கடாயில் வறுக்க வேண்டியதை வறுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
பொரிக்கும் எண்ணையை விட்டு வெட்டிய கிழங்குகளைப் போட்டு மெல்லிய ப்ரவுண் நிறத்தில் பொரித்தெடுத்து வடிய வையுங்கள்.

சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, பிறகு பூண்டு, வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேற்பிலை இறுதியில் வெந்தயம் சேர்த்து சிவத்ததும் இறக்கி பிரஷர் குக்கரில் கொட்டுங்கள்.

பொரித்த கிழங்கு, பொடிகள், உப்பு, புளி, தண்ணீர், தேங்காய்ப் பால் அனைத்தையும் விட்டு கலக்கி மூடிபோட்டு 3 விசில் வைத்து விடுங்கள்.

பொரித்த வாசத்துடன் குழம்பு மூடி திறக்க முன்பே கமகமக்கும்.
ஆற எடுத்து பரிமாறும் கோப்பையில் விடுங்கள். நன்கு அவிந்த மிகவும் மெதுவான கரணைக்கிழங்குக் குழம்பு விரைவில் காலியாகிவிடும.

(கிழங்கு பிஞ்சாக இருந்தால் பொரித்தபின் குழம்பை பிரஷர்குக்கரில் வையுங்கள். முற்றிய கிழங்கு என்றால்பொரித்த பின் பாத்திரத்தில் வைத்தும் எடுக்கலாம்.)

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors