டிப்ஸ்|Cooking tips Tamil

Loading...

எந்த ஸ்வீட் செய்தாலும், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு கற்கண்டை பொடி செய்து சேர்த்தால், சுவை கூடும்.

சாம்பார் பொடி தயாரிக்கும்போது, ஒரு துண்டு சுக்கையும் தட்டிப் போட்டு அரைத்தால், பருப்பினால் உண்டாகும் வாயுத்தொல்லை இருக்காது.

ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து, மோரில் கரைத்து, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால்… வயிற்றுப்போக்கு, வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Cooking tips Tamil

வெயில் காலத்தில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்துக்கொள் வது நல்லது. வெல்லம் சூட்டைக் குறைப்பதுடன். இரும்புச் சத்தையும் அளிக்கவல்லது.

அடிக்கடி இருமல், தும்மல் ஏற்படுகிறதா? அகத்திக் கீரை, அகத்திப்பூ சாறுகளுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

ஒரு பிடி அவலை ஊறவிட்டு… சிறிதளவு மிளகு, தேங்காய்த் துருவல் சேர்த்து பால்விட்டு அரைத்து, புளித்த தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பம் செய்தால், புளிப்பே இருக்காது.

சமைத்த பாத்திரங்களில் உள்ள எண்ணெய்ப் பசையை எளிதாக சுத்தம் செய்ய ஓர் உபாயம்… ஐஸ் க்யூப் ஒன்றைப் போட்டு, க்ளீனிங் பவுடர் போட்டுத் தேய்த்தால், பளிச் என்று ஆகிவிடும்.

Loading...
Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors