வெஜி டேபிள் ஊத்தப்பம்|vegetable uthappam in tamil

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 2கப்
உளுத்தம் பருப்பு – 3/4
வெந்தயம் -1/2ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தேவையான காய்கறிகள்
கேரட் -2
குடைமிளகாய் -1
தக்காளி -2
வெங்காயம் -2 பெரியது
நல்லெண்ணெய் -தேவையான அளவு
செய்முறை

அரிசி ,உளுத்தம்பருப்பு இரண்டையும் 5-6 மணிநேரம் ஊர வைக்கவும் . பிறகு மிக்ஸ்யில் அரிசி பருப்பு ,வெந்தயம் ,உப்பு சேர்த்து நெய்சாக அரைத்து எடுக்கவும்.
.அரைத்த மாவை 6-7 மணிநேரம் வெளியில் வைக்கவும் . காய்கறிகளை தனித்தனியாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.

vegetable uthappam cooking tips in tamil samyal kurippu

.தோசை கல்லில் மாவை ஊத்தப்பாமாக சுட்டு அதில் வெங்காயம் ,காய்கறிகளை போட்டு நல்லெண்ணை விட்டு இரு புறமும் திருப்பி போட்டு எடுக்கவும் .சுவையான வெஜிடேபிள் ஊத்தப்பம் ரெடி .

பின் குறிப்பு
காய்கறிகளை வதக்கியும் சேர்க்கலாம். இதற்கு தொட்டு கொள்ள குடைமிளகாய் சட்னி சுவையாக இருக்கும்

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors