கறி சமோசா|curry samosa In Tamil

தேவையான பொருள்கள் :
கொந்திய கறி – 200 கிராம்
வெங்காயம் – 3
மைதா மாவு – 1 க‌ப்
இஞ்சி, பூ‌ண்டு ‌
சோம்பு பட்டை லவங்கம் – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – பொ‌ரி‌க்க தேவையான அளவு
டால்டா – 100 கிராம்
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உ‌ப்பு
செய்முறை :
கொந்தின கறியை அல‌சி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டு, 1 ட‌ம்ள‌ர் நீர்ஊற்றி வேக வைக்க வேண்டும். க‌றி வெ‌‌ந்தது‌ம் அ‌தி‌ல் நறு‌க்‌கிய வெ‌ங்காய‌த்‌தி‌ல் பா‌தியையு‌ம், உ‌ப்பையு‌ம் சே‌ர்‌த்து மேலு‌ம் அரை ம‌ணி நேர‌ம் வே வை‌‌த்து இற‌க்‌கி‌க் கொ‌ள்ளவும‌்.

curry samosa recipe in tamil, samosa seimurai
இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை மி‌க்‌சி‌யி‌ல் சிறிது நீர் தெளித்து அரை‌த்து‌க் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தே‌க்கர‌ண்டி எண்ணெ‌ய் ‌வி‌ட்டு, மீதமுள்ள வெங்காயத்தையும், நசுக்கி வைத்துள்ள மசாலாவையும் போட்டு, வேக வை‌த்த க‌றியையு‌ம் சே‌ர்‌த்து வதக்கவு‌ம். நீர் சுண்டி கறி சிவந்தவுடன் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி கறியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மைதாமாவைச் சலித்து, கால் தேக்கரண்டி உப்பு கரைத்த நீரைத் தெளித்து 70 கிராம் டால்டாவைக் காய்ச்சி ஊற்றி பூரிக்கு பிசைவது போல் பிசைந்து வட்டமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும்.
திரட்டிய பூரிகளை, கத்தியினால் இரண்டு சம பாகங்களாக அறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு அரை பூரியை எடுத்து அதன்மத்தியில் அரை தேக்கரண்டி கறி வறுவலை வைத்து, பூரியை முக்கோணமாக மடித்துவிட வேண்டும். இவ்வாறு எல்லா பூரிகளையும் சம்சாவாகச் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து, டால்டாவை ஊற்றிக் காய்ந்ததும், இரண்டு அல்லது மூன்று சம்சாவாக‌ப் போட்டுச் சிவந்தபுடன் எடுத்துவிட வேண்டும். அடுப்பை மிகவும் சிறியதாக எரிய விட வேண்டியது அவசியம்.

Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors