ஈஸி வெஜ் புலவு|easy veg pulao in tamil

Loading...

தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

பெரிய வெங்காயம் – 2,

பச்சை மிளகாய் – 3 (விருப்பப்பட்டால்),

கேரட் – 1,

பீன்ஸ் – 6,

பட்டாணி – ஒரு கைப்பிடி,

எலுமிச்சம்பழச் சாறு -2 டேபிள்ஸ்பூன்,

புதினா + மல்லித்தழை – சிறிதளவு, இஞ்சி + பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

பாக்கெட் பால் – 2 கப்.

தாளிக்க:

பட்டை – 1,

லவங்கம் – 2,

ஏலக்காய் – 2,

முந்திரி – 6,

நெய் – 4 டேபிள்ஸ்பூன்.

easy veg pulao in tamil,cooking tips in tamil easy veg pulao,samyal kurippu easy veg pulao

செய்முறை:

பாசுமதி அரிசியை கழுவி ஊறவிடுங்கள். காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பிறகு நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

பின்னர் இஞ்சி + பூண்டு விழுது, புதினா, மல்லித்தழை, காய்கறி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். (வீட்டில் பாலும் சில காய்கறிகளும் இருந்தால் போதும், இந்த ‘ஈஸி புலவு’ செய்து விடலாம்).

Loading...
Loading...
Categories: Biryani Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors