முட்டை போண்டா|egg bonda recipe in tamil cooking tips

தேவையான பொருட்கள்:

முட்டை – 3 (வேக வைத்தது)

கடலை மாவு – 1 கப்

பேக்கிங் சோடா – 1 சிட்டிகை

பச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

 

Mutta bonda in tamil ,egg bonda samyal kurippu tamil

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடேற்ற வேண்டும். எண்ணெயானது காய்ந்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

அதேப் போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை போண்டா ரெடி!!!

Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors