முட்டை குருமா|muttai kurma in tamil

Loading...

தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-2
முட்டை-3
பச்சைமிளகாய்- 3(அ)4
பூண்டு-4 பற்கள்
கொத்துமல்லி இலை-சிறிது
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
கரம் மசாலா-1டீஸ்பூன்
உப்பு

அரைக்க
தேங்காய் – 3டேபிள்ஸ்பூன்
முந்திரி-4
சோம்பு-1டீஸ்பூன்

 

muttai kurma in tamil cooking tips, muttai kurma seivathu eppadi, egg kuruma recipe in tamil ,muttai kurma samayal kurippu

செய்முறை
இரண்டு முட்டைகளை தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
தேங்காய்-முந்திரி-சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துவைக்கவும்.
வெங்காயம்,தக்காளி, பூண்டை நீளவாக்கில் நறுக்கவும்.
பச்சைமிளகாயை ஒடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு (வேகவைத்த முட்டையில் உப்பு இருக்கிறது,கவனம்!) சேர்த்து மசாலா வாசம் போகும்வரை கிளறவும்.
அரைத்த விழுது சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.
சில நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
தீயைக் குறைத்து 4-5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான முட்டைகுருமா ரெடி! ஆப்பம்-பரோட்டா-சப்பாத்தி-இட்லி-தோசை-இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.

ஆப்பம் குருமா உடன் தேங்காய் சட்னியும் சேர்ந்துகொண்டால் அமர்க்களமான பொருத்தம்தான்! நீங்களும் செய்து ருசித்துப் பாருங்க!

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors