எண்ணை கத்தரிக்காய் குழம்பு|ennai kathirikkai kuzhambu in tamil

Loading...
  1. கத்தரிக்காய் சிறியது: 1/4 கிலோ(முழுக்கத்தரிக்காய் காம்பு நீக்கி  நான்காக கிறிக்கொள்ளவும்)
  2. சாம்பார் வெங்காயம்: 10 சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
  3. வெள்ளைப்பூண்டு: 10 சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
  4. தக்காளி: 3 சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
  5. பச்சை மிளகாய்- 4 காம்பு நீக்கி கிறிக்கொள்ளவும்
  6. புளி: 1 சிறி எலுமிச்சம்பழ அளவு( ஊறவைத்து தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.)
  7. சாம்பார் பொடி: 2 மேசைக்கரண்டி
  8. பெருங்காயப்பொடி: சிறிது
  9. வற்றல் மிளகாய்- 4
  10. வெந்தயம்: 1 தேக்கரண்டி
  11. கடுகு: 1 தேக்கரண்டி
  12. கறிவேப்பில்லை- 1 கொத்து
  13. மல்லித்தழை- 1 பிடி சிறிதாக நறுக்கியது
  14. நல்லெண்ணை-3 மேசைக்கரண்டி
  15. உப்பு தேவைக்கேற்ப

 

ennai kathirikkai kuzhambu,samyal kurippu in tamil ,cooking tips ennai kathirikkai kuzhambu,tamil nadu style ennai kathirikkai kuzhambu

செய்முறை:

அடிகணமான சட்டியில் நல்லெண்ணை 2 மேசைக்கரண்டி ஊற்றி அடுப்பில் வைக்கவும்  எண்ணை சூடேறியதும், தீயை குறைத்து வைத்துக்கொள்ளவும்.  கடுகு, வெந்தயம், வத்தல், போட்டு வெடிக்கவிடவும், கறிவேப்பில்லை,  வெங்காயம்,  வெள்ளைப்பூண்டு,  பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்,

நன்கு வதங்கியதும் தக்காளி சிறிதாக நறுக்கியதை சேர்த்து வதக்கவும், இதில் கத்தரிக்காய் உப்பு சேர்த்து வேகவிடவும், (காய் உடையாமல் கிளறவும்) சாம்பார் பொடி, பெருங்காயப்பொடி புளி ஊறவைத்து பிசைந்த தண்ணீரையும் காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

இதில் மீதமுள்ள நல்லெண்ணை சேர்த்து கொதிக்கவைக்கவும். எண்ணை மேலே வரும்போது மல்லிதழைத்தூவி இறக்கவும்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors