இறால் குழம்பு|eral curry recipe in tamil

Loading...

தேவையான பொருட்கள்

  • இறால் – 250 கிராம்
  • வெங்காயம் – 2 (நறுக்கியதும்)
  • கறித்தூள் – 11/2 மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 11/2 மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் – ¼ மேசைக்கரண்டி
  • பச்சைமிளகாய் – 2 (நறுக்கியது)
  • தேங்காய்ப்பால் – 1கப்
  • கறுவா – 1
  • பூண்டு – 3பல் (நறுக்கியது)
  • எண்ணெய் – 8 மேசைக்கரண்டி
  • எலுமிச்சைச்சாறு – 1 மேசைக்கரண்டி
  • கருவேப்பிலை
  • உப்பு – தேவைக்கு

eral curry,eral kuzhambu samayal kurippu,cooking tips in tamil eral curry,tamil nadu prawn curry recipe in tamil

 

செய்முறை

இறாலை சுத்தம் செய்து 2 அல்லது 3 முறை நன்றாக நீரில் கழுவி மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். பின் அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, கறுவா போட்டு 2 நிமிடம் வதக்கியதும், அதனுள் கருவேப்பிலை, கறித்தூள், மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், எலுமிச்சைச்சாறு, கலந்து வைத்த இறால், ஆகியன சேர்த்து மெல்லிய தணலில் வதக்க வேண்டும். பிறகு தேங்காய்ப்பால் பால் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும். இச் சுவையான இறால் கறியினை சோறு, புட்டு, இடியப்பம், பான், ஆகியவற்றோடு சாப்பிட ருசியாக இருக்கும்.

 

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors