முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்|

முகம் அழகானால், மேனி முழுவதும் அழகானாதுபோல் ஒரு தோற்றம் உருவாகிவிடும். முகத்துக்கு அழகூட்டும் சில பேஸ் பேக் பற்றி பார்க்கலாம்.

1. முக அலங்காரம்:

ஆடையகற்றிய பால், சிறிய துண்டு பப்பாளிப்பழம், ஓட்ஸை மாவாக்கிய ஓட்ஸ் பௌடர் ஆகிய மூன்றையும் குழைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து, இந்த கலவை முகத்தில் படிந்து ஒரு இறுக்கத்தைக் கொடுக்கும் அதன் பின்னால், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவணும்.

அடுத்தாற்போல ஒரு தேக்கரண்டி தயிருடன் அரை தேகக்ரண்டி எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் பூசி அது காய்ந்ததும் கழுவிவிடலாம்.

மேலும், கடலை மாவில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரும் ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவிய பின்பு 20 நிமிடங்கள் கழித்து அதைக் கழுவிவிடலாம்.

உளுந்தை நன்றாக அரைத்து அத்துடன் சம அளவு பால் மற்றும் தேன் கலந்து பசை போலாக்கி முகத்தில் தடவுவதும், சிறந்த பேஸ்பேக் முறையே.

face pack in tamil

2. கால், பாதங்களுக்கு மென்மையும் பொலிவும் ஏற்பட:

ஐந்து மேஜைக்கரண்டி ரவையை நீரில் குழைத்து கால் மற்றும் பாதங்களில் தடவியபின், 30 நிமிடம் கழித்து கழுவிவிடவும். ஆறு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் இரண்டு ஸ்பூன் கிளிஸரின், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து இரு வாரங்களுக்கு ஒருமுறை கால்களில் தடவி அரை மணி நேரம் சென்றதும் கழுவி விடலாம்.

3. கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க :

குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்ணிமைக்கு மேலாக வைத்து அரை மணி நேரம் ஓய்வெடுக்கவும். பின்பு தேங்காய்ப் பாலினைத் தொட்டு உங்கள் மோதிர விரலால், கண்ணைச் சுற்றி மஸாஜ் செய்யவும்.

4. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க:

எட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில், இரவு ஊற வைத்து, மறுநாள் காலை அதை அரைத்து, ஒரு தேக்கரண்டி பாலுடன் கலந்து முகத்தில் பூசினால், கரும்புள்ளிகள் மறையும். மிகவும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு பாதாம் மாஸ்க் நல்லது.

Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors