பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு|garlic curry leaves kuzhambu

Loading...

வேண்டியவைகள்.
பூண்டு—100 கிராம். தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஸாம்பார் வெங்காயம்–100 கிராம்
தக்காளி—2 அல்லது 3
கடுகு–அரை டீஸ்பூன்
வெந்தயம்—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–1– டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்.
வற்றல்மிளகாய்—2 இவைகள் எல்லாம்.தாளித்துக் கொட்டுவதற்கு.
வேண்டிய பொடிகள்
தனி மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
தனியாப்பொடி—-4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
புளி—1 பெறிய நெல்லிக்காயளவு.
ருசிக்கு உப்பு
உருவின பச்சை கறிவேப்பிலை–கால்க்கப்பிற்கு அதிகமாகவே
இருக்கலாம்
1 மேலே தூவ சிறிது கறிவேப்பிலை பாக்கி வைத்து விட்டு சிறிது
எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து வைக்கவும்.
2 புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும்.கறைத்து சாரெடுக்கவும்.
3 சின்ன வெங்காயத்தை உறித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில்
போட்டு சுற்றி எடுக்கவும்.

garlic curry leaves kuzhambu in tamil
4 தக்காளிப் பழத்தை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
5. குழம்புப் பாத்திரத்தை காஸில் வைத்துச் சூடாக்கி எண்ணெயை விடவும்.
6 எண்ணெய் காய்ந்ததும் கடுகு மிளகாயைப் போட்டு, கடுகு வெடித்ததும்
பருப்புகள் வெந்தயம் சேர்த்து சிவக்க வறுத்து, வெங்காயம், பூண்டு
சேர்த்து நன்றாக வதக்கவும். பெருங்காயம் சேர்க்கவும்.
7 தக்காளியைச் சேர்த்து வதக்கி மிளகாய்,தனியா, மஞ்சள்பொடி
வகையைச் சேர்த்துப் பிரட்டி புளி ஜலம், உப்பைச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க விடவும்.
பூண்டு வெந்து , பொடி வாஸனைகள் அடங்கி, குழம்பு திக்காக வரும்
பொழுது கறிவேப்பிலை பொடித்ததைச் சேர்க்கவும்.
குழம்பு நீர்க்க இருக்கும் போலிருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை
தண்ணீரில்க் கரைத்து சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
கமகமவென்று குழம்பு தயார்.மிகுந்த கறிவேப்பிலையைத் தூவவும்
சாதத்துடன் சாப்பிடவும், மற்றும் வேண்டியவைகளுடன் சாப்பிடவும்
ருசியான குழம்பு தயார்.
வேண்டுமானால் துளி வெல்லம் போடலாம்.
ருசித்து பார்த்து எழுதுங்கள்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors