மீன் குழம்பு|gramathu meen kulambu

Loading...

தேவையான பொருட்கள்:

மீன் – 1 கிலோ
சிகப்பு பெரிய வெங்காயம் – 2 (சிறியதாக நறுக்கி கொள்ளவும்)
தக்காளி – 1
பூண்டு – 7 பள்ளு
புளி –  எலுமிச்சை அளவு
கருவேப்பில்லை – 1 கொத்து
வெந்தயம் – 1 சின்ன கரண்டி

மிளகாய் தூள் – 3 மேசை கரண்டி
மல்லி தூள் – 2 மேசை கரண்டி
நல்லெண்ணெய் – தேவையான  அளவு
உப்பு – தேவையான அளவு

 

gramathu meen kulambu,gramathu meen kulambu samayal kurippu,gramathu samayal,gramathu meen kulambu cooking tips in tamil

செய்முறை:

மீனை சுத்தமாக கழுவி கொள்ளவும். முதலில் வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் வெந்தயம் மற்றும் கருவேப்பிலையை போடவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பிறகு பூண்டை இடித்து வெங்காயத்தோடு சேர்த்து பூண்டு வாசனை போகும் வரை வதக்கி தக்காளி சேர்க்கவும். தக்காளி முழுவதுமாக வெந்தவுடன் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு  சேர்த்து கொஞ்ச நேரம் அடுப்பை சிறிதாக வைத்து, வாணலியை தட்டு போட்டு மூடி கொள்ளவும். சிறிது நேரத்தில் நல்ல மனம் வரும். பிறகு மீனை அதோடு சேர்த்து மீன் உடையாமல் கிளறி விடவும். சிறுது நேரம் மூடி வைக்கவும். மசாலா, உப்பு ருசி பார்த்து கொள்ளவும். கண்டிப்பாக நல்ல ருசியாக இருக்கும். கடைசியாக கரைத்த புளி தண்ணீரை  சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

இப்போது சுவையான மீன் குழம்பு ரெடி. செய்து பாருங்களேன். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

குறிப்பு: மீன் குழம்பு கெட்டியாக வேண்டும் என்றால்  நன்றாக குழம்பை வத்த விடவும்.

வத்த விட்ட மீன் குழம்பு இப்படித்தான் இருக்கும்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors