ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா|hotel style parotta in tamil

தேவையான பொருட்கள் :

மைதா – 500 கிராம்
உப்பு – 1 tspn
சர்க்கரை -1tbsp
நெய் (அ ) வெண்ணெய் – 1 tspn
(அ ) டால்டா
சோடா உப்பு – 1/4 tspn
பால் – மாவு பிசைய தேவையான அளவு

செய்முறை :

மைதா மாவுடன் உப்பு ,சர்க்கரை , சோடா உப்பு , நெய் சேர்த்து நன்றாக கலக்கவும் . பிறகு அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசையவும் .

சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் மிருதுவாக இருக்க வேண்டும் . மிகவும்
கெட்டியாக இருக்க கூடாது .

 

hotel style parotta in tamil ,hotel style parotta samayal kurippu,tamil nadu hotel style parotta,hotel style parotta cooking tips in tamil

பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி ஒரு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி விடவும். 3-4 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும் .

இப்பொழுது ஊறவைத்த பரோட்டா மாவினை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும் . சப்பாத்தி கல்லில் சிறிது எண்ணெய் தடவி ஒரு உருண்டையை வட்டமாக தட்டவும் .

அதன் மேல் எண்ணையை தடவவும் . இதனை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி மடியுங்கள் . மடித்ததை சுருட்டி கொள்ளுங்கள் . அதன் மேல்
எண்ணையை தடவுங்கள் . மீண்டும் இதை தேய்த்து கொள்ளுங்கள் .

இதை தோசை கல்லில் போட்டு இரண்டு புறமும் சிறிது எண்ணையை தடவி
நன்றாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors