இஞ்சி புளி ஊறுகாய்|inji oorugai in tamil seivathu eppadi

தேவையானப்பொருட்கள்:

இஞ்சி – 3 அல்லது 4 அங்குல அளவு துண்டு – 1
புளி – ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
வெல்லம் – ஒரு சிறு துண்டு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வெந்தயப் பொடி – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:

இஞ்சியை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய இஞ்சி 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு இருக்க வேண்டும்.

inji oorugai in tamil  seivathu eppadi

புளியை ஊற வைத்து, கரைத்து, ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் அதில் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும். புளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து விட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, நன்றாகக் கலந்து கொதிக்க விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் வெல்லத்தைச் சேர்த்து கெட்டி குழம்பு போல் ஆகும் வரை கொதிக்க விட்டு, கடைசியில் வெந்தயப் பொடியைத் தூவிக் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.

தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்

Categories: oorugai Recipes In Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors