பிராமண கதம்ப சாம்பார் |Kadamba Sambar iyengar recipe in tamil

Loading...

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு : 1 டம்ளர் (மஞ்சள் பொடியுடன் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்)

மஞ்சள் பொடி : 1 டி ஸ்பூன்

புளி : 1 எலுமிச்சை அளவு (கரைத்துக்கொள்ளவும்)

சாம்பார் பொடி : 1 1/2 டி ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

காய்கறிகள் : கலவையாக 1/4 கிலோ நறுக்கிக்கொள்ளவும் – (அவரைக்காய், பரங்கிக்காய், பூசணிக்காய், பீன்ஸ், சர்க்கரை வள்ளிகிழங்கு, காரட், குடை மிளகாய்)

மொச்சை or பட்டாணி : 1 கப்

வறுத்து அரைக்க :

மிளகாய் வற்றல் : 5 Nos

தனியா : 2 டி ஸ்பூன்

கடலை பருப்பு : 2 டி ஸ்பூன்

பெருங்காயம் : 1 துண்டு

வெந்தயம் : 1 டி ஸ்பூன்

தேங்காய் : 1/2 மூடி

எண்ணை : தேவையான அளவு

கடுகு : 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தழை : சிறிது

 

Kadamba Sambar  seivathu eppadi,Kadamba Sambar recipe cooking tips in tamil ,tamil iyangar  samayal kurippugal,iyar cooking tips tamil nadu

செய்முறை :

  • நறுக்கிய காய்கறிகளை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதில் புளி தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • 10 நிமிடம் கொதித்தவுடன் அதில் வெந்த பருப்பு சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்.
  • கடுகு தாளித்து கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்
Loading...
Loading...
Categories: Iyengar Samayal, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Recent Recipes

Sponsors